Thursday, 11 December 2014

சமிபத்திய ‪‎ஜென்நிலை‬

அவள்: ஆ காட்டுங்க...
நான் : ஏன்?
அ: ஆ.. காட்டுங்க நா, ஏன்... எதுக்குனுட்டு...
நா: ஆஆஆ... (கையில் வச்சிருந்த மாம்பழ துண்டை வாயில் போட்டாள்.)
நா: (கண் சிமிட்டியபடி) எதாவது விசேஷமா?
அ: அய்ய... புளிக்குதா இல்லையானு சீக்கிரம் சொல்லுங்க...
நா: நல்லாத்தான் இருக்கு ஏன் கேட்ட?
அ: இல்ல குழந்தைக்கு குடுத்தேன் கண்ண முடி வித்தியாசமா சாப்டா அதான் டவுட்...
நா: நீயே இத சாப்ட்டு பாதிருக்கலாம்ல ஏன் எனக்கு கொடுத்து கேட்ட? (மீண்டும் கண் சிமிட்டலுடன்)
அ: ஹ்ம்ம்... அது கிழ விழுந்திருச்சி அதான்.
சமிபத்திய ஜென்நிலை‬ உணர்தல்...

Wednesday, 10 September 2014

My list of books that I enjoyed reading.

Appa introduced me to books. He always reads something, still he gets surrounded by books and bits and pieces of paper cuttings.


சிறுவயதில் அவர் எனக்கு வாங்கி தந்த "பூந்தளிர்" என்ற சிறுவர் பத்திரிகைதான் பாட புத்தகம் தவிர்த்து நன் வாசித்த முதல்  புத்தகம். அதுவே என் முதல் அறிமுகம். அப்புறம் அப்படியே ஆர்வம் அதிகமாகி அவருக்கு தெரியாமல் காசு ஆட்டயபோட்டு ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல்னு நம்ம இலக்கிய!!! அறிவ வளர்த்துகிட்டு இருந்த சமயம் கோவிந்த சித்தப்பா ஒரு புத்தக கண்காட்சில நவரதினமலை என்றொரு புத்தகம் வாங்கி தந்தார். எழுதியது யாரென்று நினைவில்லை. நார்னியா, ஹாரி பாட்டர் போன்று கற்பனை கதைகள் நிறைந்த புத்தகம். அதுவே என் மனதில் நீங்கா இடம் பிடித்த முதல் புத்தகம்.. என் பொண்ணுக்கு படித்து கதை சொல்வதற்காக அதை இப்பொழுது தேடி கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது புத்தகம் பதின் பருவத்தில் படித்த ஒரு போர்க்களமும் இரு பூக்களும் - வைரமுத்து எழுதியது. இது நண்பன் சதீஷ் அறிமுகம் செய்த புத்தகம். அவங்க அப்பா இந்த நாவல பைண்டிங் செய்து வச்சிருந்தார். அற்புதமான காதல் காவியம். வைரமுத்துவின் காட்சி விவரிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். இப்போ வரைக்கும் எங்க தேடியும் கிட்டவில்லை.

மூன்றாவது அக்னி சிறகுகள் - APJ சொல்ல அருண் திவாரி எழுதியது. அப்பா வாங்கினதா ஞாபகம். எனக்கு இந்த ராக்கெட், துணை கோள்கள் (satellites), ஏவுகணைகள் மேல கொஞ்சம் ஆர்வம். அதுக்கும் அப்பா தான் காரணம். சின்ன வயசில நைட்டு வாணாத்த காமிச்சு நான் எதோ கேக்க, அவரு நிலா, மேகம், நட்ச்திரம்னு ஆரம்பிச்சி அப்பப்ப ஏதேதோ சொல்வார், பல சமயம் நம்மள எமாத்துராறோனு கூட சந்தேக பட்டிருக்கேன். அந்த ஆர்வங்களுக்கு மேதகு கலாம் அவர்களின் சுய சரிதம் செம தீனியா இருந்திச்சி. ரெண்டு தடவ படிச்சிருக்கேன். மறுபடியும் படிக்கணும். சயின்சவிட அவரோட வாழ்கை செம morale boosterஆ இருக்கும்.

நாலாவது Who moved my cheese - Spencer Johnson எழுதியது. நண்பன் சரவணசங்கர் அறிமுகபடுத்திய புத்தகம். ஒரு மூணு மணி நேரம் இந்த புக்க பத்தி பேசி பில்ட்அப் கொடுத்து வாங்கி படிக்கச் வச்சான். ஒரு எலி கூட்டத்த வச்சு தன்னிலை மேம்பாடு (அதாங்க personality development) பற்றி விளக்கும் அருமையான புத்தகம்.

ஐந்தாவது பொன்னியின் செல்வன் - கல்கி எழுதியது. ஒரு தமிழ் வரலாற்றூப் புதினம். இதுவும் அப்பா வாங்கினதுதான். சின்ன வயசில அவர் கல்கி நாவல்கள் படிக்கிறத பார்த்து இருக்கேன். அப்போ அது மேல ஆர்வம் வரல. யாராவது பூக்ஸ் பத்தி பேசினா கல்கி பத்தி கண்டிப்பா எதாவது சொல்வாங்க. அப்படி என்னதான் எழுதிருக்கார்னு ஆர்வத்துல படிச்சி அவோரடா எழுத்தில் மயங்கியதில் நானும் ஒருவன்.

ஆறாவது World is flat - Friedman எழுதியது. எதோ படத்தோட torrent தேடிக்கிட்டு இருந்தப்போ banned books னு title போட்டு ஒரு torrent. அப்படி என்ன தான் இருக்கும் டவுன்லோட் பண்ணி பார்த்தப்ப பல pdf books கூட இதுவும் இருந்திச்சி. புக் title பார்த்திட்டு எதோ கான்ஸ்பிரசி புக் போலன்னு படிக்க ஆரம்பிச்சா Globalization, outsourcing, supply chain நு இப்போதைய இந்திய வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கல் பற்றி விரிவா எழுதி இருந்தாங்க. இவ்ளோ நல்ல புத்தகத்த ஏன் இந்த list ல வச்சானுங்கனு இன்னும் தெரியல.

ஏழாவது Poor Little Rich Slum - Rashmi Bansal எழுதியது. உலகின் மிக பெரிய slum மும்பை தாரவி பற்றியது. அப்பகுதி மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியது. தாரவி பற்றிய உங்களின் மதிப்பிடை முற்றிலும் மாற்றக்கூடிய புத்தகம். A must read for entrepreneurs.

இது கூடவே இதே எழுத்தாளர் எழுதிய I Have a Dream மும் வாங்கி படிச்சு பார்த்தேன் எவ்ளோ முயற்சி பண்ணாலும் சில பக்கங்களுக்கு மேல தாண்டவே முடில, ஏற்கனவே படிச்சது தெரியாம படிச்சதையே திரும்ப திரும்ப படிச்சிருக்கேன், சில பக்கம் போனதுக்கு அப்புறம் ஏற்கனவே படிச்ச மாதிரி இருகேன்னு தோணும். இது வேளைக்கு ஆவாதுன்னு அப்படியே வச்சுட்டேன். அதுக்கு காரணம் புக் இல்ல, எனக்கு அப்போ கல்யாண சீசன் அதான்!!!. இனிமேதான் மறுபடி மொதல்ல இருந்து படிக்கணும்.
இதுவே என் மனதில் நின்ற புத்தகங்களின் வரிசை. Well, thanks Javid. You made me to recollect, remember and cherish those memories.

Here is the list in short:
  1. நவரதினமலை
  2. ஒரு போர்க்களமும் இரு பூக்களும் - வைரமுத்து
  3. Wings of fire -  APJ,‎ Arun Tiwari
  4. Who moved my cheese - Spencer Johnson
  5. பொன்னியின் செல்வன் - கல்கி
  6. World is flat - Friedman
  7. Poor Little Rich Slum - Rashmi BansalFriday, 22 March 2013

Sunday, 25 December 2011

2011 a year will last in my memory forever


2011 a year that will last in my memory forever, Yes I have elevated to the next level of my life "Got Married" :)

During the past whenever I dreamed about my marriage I was clear about one thing, that I will be the one to decide and design my wedding invitation. And I got this inspiration from my dad who always used to be customized in each and everything in his life, from a seasonal greeting card to Lily pond (our home). Like father like son!

Tuesday, 1 February 2011

The chief source of problems is solutions


Today I've a received an e-mail form ICICI bank promoting its ICICI Fellows program. As usual I thought it was yet another money making product from ICICI, but it was a real surprise to me on visiting their website. Its not a product to produce money but its a program to produce leaders of tomorrow. Wow its great to read about this initiative. 
Not giving a second thought I was intended to participate in the program and registered, but its sad to know that the eligible age was 21 to 28 :(

I found many interesting/inspired thing while going through the pages of fellow 2010 profiles and their thoughts and notes on their blogs. Sure India will lead the world to peace and prosperity in future.

And I would like to share a post by Akshay Nikam which impressed me.